<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/10489107?origin\x3dhttp://prabandham.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

கோதாஸூக்தி பிரபாவம்




திருப்பாவை என்பது ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தின் விளக்கம்.

பெரியாழ்வார் பல்லாண்டு பாசுரங்களின் வாயிலாக “ஓம்” என்ற பிரணவத்தின் பொருளை நமக்கு விளக்கினார். அவர் பெண்பிள்ளை, ஆண்டாள், தம்முடைய திருப்பாவை பாசுரங்களால் “நமோ நாராயணாய” என்ற பதத்தின் பொருளை விளக்குகிறாள். இவ்வகையிலே, தந்தையும் மகளும் சேர்ந்து “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்க்ஷர மந்திரத்தின் பொருளை நமக்கு விளக்குகிறார்கள். ஆகையினாலேயே நாம் திருப்பல்லாண்டையும், திருப்பாவையையும் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் அனுஸந்திக்கிறோம். திருப்பல்லாண்டும், திருப்பாவையும் அஷ்டாக்க்ஷர மந்திர ஜப ரூபமாக விளங்குவதால், அநத்யயன காலமான மார்கழி மாதத்திலும், இப்பாசுரங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன. ஒவ்வொருவரது கிரகத்திலும், பெருமாள் திருவாரதனத்தின்போது சாற்றுமுறையாக அனுஸந்திக்கிறோம்.



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பாசுரம் ஐந்து

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்*
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.